Saturday, 15 May 2010

கார கொழம்பு

இருக்கறதிலேயே simple'ஆ செய்ய கூடிய ஒரே சமையல் இது தான். சில பேர் இத புளி கொழம்புன்னு கூட சொல்லுவாங்க. ஆனா எங்க ஊர் பக்கம் இதுக்கு பேர் கார கொழம்பு தான். சரி, இத எப்படி செய்யறதுன்னு பார்ப்போம்.

தேவையான பொருட்கள்: வெங்காயம், தக்காளி, புளி, உருளை கிழங்கு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், வெந்தயம், கடுகு, கருவேப்பிலை, கொத்தமல்லி, உப்பு, சமையல் எண்ணெய்

செய்முறை:
என்கிட்ட ஒரே ஒரு electric rice cooker மட்டும் தான் இருக்கு. அதுல தான் எல்லா சமையலும். இது simple'ஆ யார் வேணும்னாலும் வாங்கலாம். Gas connection அது இதுன்னு time'ஐயும் காசையும் waste பண்ண வேணாம். Gas connection and pressure cooker இருந்திச்சுனா no problem. இத அப்படியா உங்களுக்கு ஏத்த மாதிரி மாத்திக்கோங்க. நான் சொல்ற இந்த குறிப்பு ரெண்டு பேர் சாப்பிடறதுக்கு ஏத்த மாதிரி இருக்கும்.
  • First, ரெண்டு (பெரிய) வெங்காயமா எடுத்து சின்ன சின்னதா நறுக்கி வெச்சிக்கணும். கண்ணு எரியாம இருக்கு தன்நில கொஞ்சம் நேரம் போட்டு வெச்சிட்டு அப்புறம் அரியலாம்.
  • ஒரு தக்காளிய எடுத்து நல்ல அறிஞ்சு வெச்சிக்கணும்.
  • கொஞ்சம் புளி எடுத்து தண்ணியில கரைச்சு வெச்சிக்கணும். ரெண்டு கோலிகுண்டு size'க்கு புளி எடுத்துகிட்டா போதும்.
  • ரெண்டு உருளைக் கிழங்கு எடுத்து
  • cooker பாத்திரத்த கழுவிட்டு electric base'ல வெச்சா கொஞ்ச நேரத்துல சூடாகிடும். Of Course electric cooker'ஓட switch'அ on பண்ணனும்.
  • பாத்திரம் சூடான ஒடனே எண்ணெய்ய ஊத்தணும். என்னோட recommendation Goldwinner oil. But that's your choice.
  • எண்ணெய் கொதிக்க ஒரு அஞ்சு நிமிஷம் ஆகலாம். அதுல கடுக போட்டு தாளிக்கணும். பாத்து எண்ணெய் கைல படாம தாளிக்கணும்.
  • வெந்தையத்த கொஞ்சமா போட்டு வறுக்கணும். ஆனா கரிஞ்சிட கூடாது.
  • இப்போ வெங்காயத்த எண்ணைல வதக்கணும். நல்லா பொன்னிறமா ஆகணும்.
  • அப்புறமா தக்காளிய பொட்டு வதக்கணும். கொஞ்சம் உப்பு சேர்த்துகிட்டா தக்காளி நல்லா மசியும்.
  • இதெல்லாம் வெந்ததுக்கு பின்னாடி, அறிஞ்சு வெச்ச உருளைக் கிழங்கை இதுல போட்டு நல்லா வதக்கணும்.
  • இதெல்லாம் கொஞ்சம் நேரம் வேக விட்டுட்டு அப்புறமா மிளகாய் தூள் போட்டு ஒரு கிண்டு கிண்டனும்.
  • ஒரு அஞ்சு நிமிஷம் வெய்ட்டீஸ், அப்புறமா ஜூட்டீஸ்.
  • Light'ஆ அடி பிடிச்சிருக்கும். புளி கரைசல் plus கொஞ்சம் தண்ணி ஊத்தணும். உப்பு கொஞ்சமா போட்டு பாத்திரத்த அப்படியே மூடி வைக்கணும்.
  • இப்போ காரம் plus உப்பு எல்லாம் உருளைக் கிழங்குல ஏறும்.
  • So after some time, lid'அ open பண்ணி extra தண்ணியும் மிளகாய் தூளும் போட்டு மூடி வைக்கவும்.
  • Electric cooker'ல எப்படியும் ஒரு 20 நிமிஷம் ஆகும்.
  • Normal cooker'னா பத்து நிமிஷத்துல உருளைக் கிழங்கு வெந்து முடிஞ்சிடும். ஒரே ஒரு உருளைக் கிழங்கு piece எடுத்து சின்ன கத்தியால வெட்டி பாத்தாலே தெரியும் வெந்திருச்சா வேகலையான்னு.
  • உப்பு காரம்'லாம் OK'வான்னு test பண்ணிட்டு கொழம்ப இறக்கிடலாம். ஒரு பாத்திரத்துல ஊத்தி வைக்கணும்.
  • இப்போ கருவேப்பிலையையும் கொத்தமல்லியையும் உருவி போட்டு பாத்திரத்த மூடி வைக்கணும்.
  • சாதம் வடிச்சு ready ஆகறதுக்குள்ள கொழம்புல கருவேப்பிலை மனம் சும்மா கம கமன்னு spread ஆகிடும்.

3 comments:

  1. itha naan try panran nalla mattum illa unna kola panren

    ReplyDelete
  2. Nalla irukkum. Kandippa try pannu Gowwww...Next time Sambhar, Meen kozhambulam solli tharen...

    ReplyDelete
  3. apadiye oru carrierla katti atul kataria chowkku anupi vachidunga, inga chapathi saptu nakku sethu pochu enna solringa

    ReplyDelete